பிஞ்சு குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு! 7 மாத குழந்தையை துடிக்க துடிக்க கொடூரமாக கொன்ற தந்தை! அதிரவைக்கும் காரணம்! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!



mysuru-father-kills-7-month-baby-sentenced-to-life

கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த ஒரு கொடூர சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகேந்திரா (வயது 42) என்பவர் தனது மனைவி ரம்யாவுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 7 மாத குழந்தை இருந்தது. நாகேந்திரா காய்கறி வியாபாரியாக இருந்தபோதும், தினசரி மது குடித்துவிட்டு மனைவிட்ம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நாகேந்திரா மது குடித்து வீட்டிற்கு வந்து, தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்குப் பிறகு, மது குடிக்க காசு கேட்டு, மறுத்த ரம்யாவை கடுமையாக தாக்கினார். மேலும் “பணம் தரவில்லை என்றால் குழந்தையை கொன்றுவிடுவேன்” என மிரட்டினார்.

இந்நிலையில், தனது கோபத்தில் தனது வீட்டிலிருந்த தராசு எடைக்கல்லை எடுத்து, 7 மாத குழந்தையின் தலை மீது தாக்கி, குழந்தையை மரணமடைந்த வகையில் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் குழந்தையை பார்த்த ரம்யா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.

இதையும் படிங்க: மகளின் சின்ன ஆசையை நிறைவேற்ற போன தந்தை! இப்படியா நடக்கணும்! அப்பாவ காணல.. கதறி அழுத சிறுமி.. பதறவைக்கும் வீடியோ!

இதற்குப் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நாகேந்திரா கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். தற்போது நீதிமன்றம் நாகேந்திராவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

இதையும் படிங்க: பாராக் க்ளைடிங் போன சுற்றுலா பயணி! கண்ணிமைக்கும் நொடியில் பள்ளத்தாக்கில் விழுந்த பயங்கரம்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ....