இந்தியா லைப் ஸ்டைல்

கேரளா சாலையில் நடமாடும் மர்ம உயிரினம்.! பீதியில் மக்கள்.! தீவிர கண்காணிப்பில் போலீசார்.!

Summary:

Mysterious creature found in kerala Kunnamkulam

கேரளாவில் குன்னம்குளம் என்னும் பகுதியில் இரவு நேரத்தில் மர்மமான உருவம் ஓன்று சாலையில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

மர்மமான உயிரினம் தொடர்பான தகவல் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருவதால் குன்னம்குளம் மற்றும் அருகிலுள்ள இடங்களில் மக்கள் பயங்கரமான இரவுகளை அனுபவிக்கின்றனர். ஒரு மனிதனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு கறுப்பு உருவம் அன்னாம்குளங்கர கோயில், சோவனூர் தொகுதி சாலை, ஆட்டுப்புட்டி, கக்காடு, திருதிகிக்காடு மற்றும் சிட்டானூர் ஆகிய பகுதிகளில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

அடுப்புட்டி பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் இந்த மர்ம உருவத்தை நேரில் பார்த்து அதே இடத்தில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். மேலும், அடுப்புட்டி பகுதியில் இருக்கும் மருத்துவமனை காவலாளி சிலரும் அந்த உருவத்தை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் தீயாய் பரவியதை அடுத்து மர்ம உருவம் நடமாடியதாக கூறப்படும் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம் எனவும், சந்தேகப்படும் உயிரினம் பற்றி தகவல் தெரிந்தால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள காவல் துறை அதிகாரி ACP மனோஜ் கூறுகையில், இது ஏதேனும் சமூக விரோதிகள் அல்லது, போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் செயலாக இருக்கலாம் எனவும், ஊரடங்கு சமயத்தில் மக்களை பயமுறுத்த இதுபேன்ற காரியத்தில் ஈடுபடலாம் எனவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement