மீண்டும் பலாத்காரம்.?... தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி... தலை துண்டிக்கப்பட்ட பெண் உடல்.!!
உத்திரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் தலை துண்டாக வெட்டப்பட்டு நிர்வாணமாக தேசிய நெடுஞ்சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக உடலை கைப்பற்றிய காவல் துறையினர் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக கிடந்த உடல்
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளம் பெண் ஒருவரின் உடல் நிர்வாண நிலையில் தலை துண்டிக்கப்பட்டு கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் பலாத்கார கொலையா.?
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் இறந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது. மேலும் கொலை செய்யப்பட்ட பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாரா.? என்ற கோணத்திலும் காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர். இளம் பெண் கடத்தி வரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா.? அல்லது இளம் பெண்ணின் காதலனே அவரை பலாத்காரம் செய்து கொலை செய்தாரா.? எனவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மலைப்பாதையில் நடந்த சோகம்; கார் மீது லாரி சாய்ந்து, 4 பேர் பலி.!
4 தனிப்படைகள் அமைப்பு
இளம் பெண் கொலை செய்யப்பட்டு சடலம் கிடந்த இடத்திலும் அதற்கு அருகாமையிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கொலையாளியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இளம்பெண்ணின் உடலில் தலை இல்லாததால் அவர் யார்.? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த பயங்கர கொலை சம்பவத்தில் கொலையாளிகளை கண்டுபிடிக்க உபி காவல்துறை 4 தனிப்படைகளை அமைத்திருக்கிறது.
இதையும் படிங்க: பிக்னிக் பயணத்தில் இப்படியா?.. இராணுவ வீரரை தாக்கி தோழி 7 பேர் கும்பலால் சீரழிப்பு.. ம.பி-யில் பயங்கரம்.!