என் தோழி பிக் அப் பண்ணலை... இளைஞர் செய்த பகீர் காரியம்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!

என் தோழி பிக் அப் பண்ணலை... இளைஞர் செய்த பகீர் காரியம்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!


Mumbai Youngster Manav Lalwani Suicide Girl Friend Could Not Pick Up Call

தனது பெண் தோழி செல்போனை எடுத்து பேசவில்லை என்று வருத்தப்பட்ட 24 வயது வாலிபர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மும்பை டோனர் பகுதியை சார்ந்தவர் மானவ் லால்வானி. இவர் நேற்று இரவு தனது பெண் தோழியுடன் இரவு நேர பார்ட்டிக்கு சென்று, நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

பின்னர், வீட்டில் இருந்தவாறு பெண் தோழிக்கு லால்வானி தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில், பலமுறை போன் செய்தும் பெண் தோழி போனை எடுத்து பேசவில்லை. 

இதனால் மனவேதனையடைந்த இளைஞர், வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மறுநாள் காலையில் மகன் நீண்ட நேரம் ஆகியும் கீழே வரவில்லை என்று சந்தேகித்த பெற்றோர்கள், மகனின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். 

maharashtra

அதன்போது, மகன் மானவ் லால்வானி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், இதுகுறித்து டிராம்பே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் சித்தேஸ்வர் தலைமையிலான அதிகாரிகள், இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இளைஞரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெண் தோழியிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி, அவரின் வாக்குமூலத்தை குறித்து வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் சரிபார்ப்புக்கு பின்னர் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.