இந்தியா

பம்பரம் போல் சுழன்ற தென்னை மரம்..! பிரமிக்கவைக்கும் வைரல் வீடியோ காட்சி இதோ..!

மும்பையில் பெய்த கனமழை மற்றும் காற்றில் குடிருப்பு பகுதிக்குள் இருந்த தென்னை மரம் ஒன்று அடிக்கும் காற்றில் பம்பரம்போல் சுழன்ற வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்த பலத்த மழையால் போக்குவரத்து முடங்கியுள்ளது. சாலைகள், ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் வெளியே தெரியாத அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக  காட்சியளிக்கின்றது.

மேலும் மும்பையில் கனமழை நீடிக்கும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் பெய்த கனமழையின்போது குடியிருப்பு பகுதிக்குள் இருந்த தென்னை மரம் ஒன்று காற்றில் பம்பரம் போல் சுழன்று சுற்றுகிறது. மரம் முறிந்து கீழே விழுந்துவிடும் என்ற அளவிற்கு அந்த மரம் வளைந்து வளைந்து சுழடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.


Advertisement