இந்தியா

அதற்கு என்ன தண்டனை..? கூகுள்ல தேடியும் கிடைக்கல.! போலீசாரை பதறவைத்த ஐடி ஊழியர்..!

Summary:

Mumbai man asked police to punishment for suicide

மும்பையை அடுத்த கோரெகாவ் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் நிலேஷ் பெடேகர். ஐடி துறையில் வேலை செய்துவரும் இவர் சமீப காலமாக குடிபோதைக்கு அடிமையாகி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு மும்பை காவல்துறை பக்கத்தை டேக் செய்து கோரெகாவ் போட்ட பதிவு ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

அந்த பதிவில், நான் தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன தண்டனை என இணையத்தில் தேடியும் எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதற்கு என்ன தண்டனை என கூறுங்கள் என மும்பை காவல்துறை பக்கத்தை டேக் செய்து கேட்டுள்ளார்.

இளைஞரின் பதிவை பார்த்து மிரண்டுபோன போலீசார் உடனே அந்த இளைஞரிடம் பேசி அவரது முகவரியை வாங்கியுள்ளனர். இதனை அடுத்து வான்ராய் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் என்பவர் நிலேஷின் வீட்டிற்குச் சென்று அவருக்கு தேவையான கவுன்சிலிங்கை வழங்கி தற்கொலை எண்ணத்தை மாற்றியுள்ளார்.

மும்பை போலீசார் தனக்கு செய்த உதவி குறித்தும், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டும் நிலேஷ் மீண்டும் பதிவு செய்திருந்தார். மேலும், அந்த பதிவில் வான்ராய் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக்கிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் அவர் மிகச் சிறந்த ஒரு மனிதர். எனக்கு உதவியவர்களுக்கு ஒரு மில்லியன் நன்றி சொல்லிக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

துரிதமாக செயல்பட்டு இளைஞர் ஒருவரின் தற்கொலை எண்ணத்தை மாற்றி, அவருக்கு உதவி செய்த மும்பை போலீசாருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.


Advertisement