கொரோனா பாதித்து குணமானால் விந்தணுவின் ஆரோக்கியம் பாதிப்பு.. மும்பை ஐ.ஐ.டி ஆய்வுகள் பகீர் தகவல்.. ஆண்களே உஷார்.!

கொரோனா பாதித்து குணமானால் விந்தணுவின் ஆரோக்கியம் பாதிப்பு.. மும்பை ஐ.ஐ.டி ஆய்வுகள் பகீர் தகவல்.. ஆண்களே உஷார்.!



mumbai-iit-research-about-corona-affected-person-sperm

லேசான மற்றும் மிதமான கொரோனா பாதித்து, அதில் இருந்து மீண்டாலும் விந்தணுவில் அதன் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை ஜஸ்லோக் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மும்பை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, கொரோனா வைரஸால் ஆண்களின் குழந்தைப்பேறு திறன் பாதிக்கப்படுமா? என ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்காக குழந்தைப்பேறு பிரச்சனை இல்லாத 20 வயது முதல் 45 வயது வரையில் உள்ள 27 ஆண்களை பயன்படுத்தியுள்ளனர்.

இந்த 27 பேர்களில் 10 பேர் நன்கு ஆரோக்கியம் உடையவர்கள் ஆவார்கள். மீதமுள்ள 17 பேர் லேசான மற்றும் மிதமான கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் ஆவார்கள். இந்த 27 ஆணின் விந்தணுக்களில் இனப்பெருக்க புரோட்டின் அளவை ஆய்வு செய்துள்ளனர். 

Mumbai

அப்போது, நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஆணின் விந்தணு புரோட்டினை விட, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகிய ஆணின் விந்தணு புரோட்டீன் அளவு குறைந்துள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமான ஆண்களின் விந்தணு கணிசமாக குறைந்துள்ள நிலையில், அதன் நகரும் தன்மை, வடிவம், எண்ணிக்கை போன்றவையும் குறைந்துள்ளது. 

இதனால் லேசான மற்றும் மிதமான கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக குழந்தைப்பேறு திறன் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர். இது மலட்டுத்தன்மைக்கும் காரணமாகிறது. இவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டாலும் அதன் பாதிப்பு நீடித்து வந்துள்ளது. 

கொரோனா சுவாச உறுப்புகளை தாக்கும் என்று விஞ்ஞானிகள் பரவலாக தெரிவித்து வரும் நிலையில், வைரஸ் மற்றும் உடலின் எதிர்வினை இதர திசுவையும் தாக்குகின்றன.