பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவுக்கான வயது தேவை; போக்ஸோ வழக்குகள் விவகாரத்தில் மும்பை உயர்நீதிமன்றம் அதிருப்தி.!

பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவுக்கான வயது தேவை; போக்ஸோ வழக்குகள் விவகாரத்தில் மும்பை உயர்நீதிமன்றம் அதிருப்தி.!



mumbai-hc-about-minor-sexual-relationship-pocso-act

 

கடந்த சில ஆண்டுகளாகவே போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்து இருக்கிறது. சிறார்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல்களை தடுக்க போக்ஸோ சட்டம் கொண்டு வரப்பட்டது. 

இவற்றில் 18 வயதுக்கு கீழ் இருக்கும் சிறார்களுடன் நட்பை ஏற்படுத்தி காதல் மொழியில் உடல்ரீதியான தொடர்பை கொண்டுள்ள நபர்களின் மீதும் போக்ஸோ பதிவு செய்யப்படுகிறது. இவை குறித்த பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நீதிபதிகளிடையே எழுந்துள்ளன. 

Mumbai

இந்நிலையில், இதுகுறித்து கருது தெரிவித்துள்ள மும்பை உயர்நீதிமன்றம், "சமீபமாகவே போக்ஸோ வழக்குகள் அதிகரித்து வருவது அதிருப்தியை தருகிறது. 

திருமண வயதை எட்டியதும் பாலியல் ரீதியான உறவுகள் நடப்பது இல்லை. பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான வயதை திருமண வயதில் இருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும்" என கூறியுள்ளது.