மும்பை: புகழ்பெற்ற ரயில் நிலையம் அருகே நடை மேம்பாலம் இடிந்து 5 பேர் பலி!

மும்பை: புகழ்பெற்ற ரயில் நிலையம் அருகே நடை மேம்பாலம் இடிந்து 5 பேர் பலி!


Mumbai bridge collapsed

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 5 போ் உயிாிழப்பு; 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு அருகே சாலையை கடப்பதற்காக நடைமேம்பாலம் உள்ளது. வழக்கம் போல இன்றும் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருந்தது. இந்நிலையில் இரவு 7.35 மணியளவில் அந்த நடைமேம்பாலத்தில் இருந்த காண்கிரீட் தளம் திடீரென இடிந்து சாலையில் விழுந்தது.

Mumbai

இந்த விபத்தில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் இடிபாடுகளில் சிக்கினா். மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் காா் உள்ளிட்ட வாகனங்களும் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினரும், காவல் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா். சம்பந்தப்பட்ட பகுதியில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.

Mumbai

இந்த விபத்தில் சுமாா் 34 போ் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி காயமடைந்ததில் 5 போ் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அளிப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் அறிவித்துள்ளார்.