தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
போதை மாத்திரைகள் வாங்க, குழந்தைகளை விற்பனை செய்த தம்பதி: பெற்றோரின் நெஞ்சை பதறவைக்கும் செயல்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, அந்தேரி பகுதியில் பிறந்த ஒருமாதம் ஆன குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, விசாரணையில் இறங்கிய காவல் துறையினர், 2 வயது மகனை விற்பனை செய்ய முயன்ற ஷபீர் - சானியா கான் மற்றும் ஷகீல் மகாராணி ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களில் சபீர் மற்றும் சானியா தம்பதிகள் ஆவார்கள். இவர்கள் உஷா ரத்தோட் என்ற குழந்தை விற்பனை செய்யும் இடைத்தரகர் வாயிலாக பணம் பெற்றதும் தெரியவந்தது.
விசாரணையில், தம்பதிகள் இருவரும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள். இருவரும் போதைக்காக தங்களின் இரண்டு குழந்தைகளை விற்பனை செய்து பணம் பெறலாம் என ஏணியுள்ளனர்.
அதன்படி முதலில் பிறந்து ஒருமதமான பெண் குழந்தையை ரூ.14 ஆயிரம் பணத்திற்கும், 2 வயது மகளை ரூ.6 ஆயிரம் பணத்திற்கும் விற்பனை செய்துள்ளனர்.
இரண்டாவது குழந்தை குறித்து உறவினர்கள் கேள்வி எழுப்பியபோது, தம்பதிகள் மீது சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விசாரணையை முன்னெடுத்த அதிகாரிகள் 2 வயது சிறுவனின் விற்பனை விவகாரத்தையும் கண்டறிந்து தம்பதிகளை கைது செய்தனர். இவர்களிடம் குழந்தையை பெற்ற உஷா, தம்பதியின் மகனை ரூ.60 ஆயிரத்திற்கும், பச்சிளம் குழந்தையை ரூ.14 ஆயிரம் பணத்திற்கும் விற்பனை செய்துள்ளனர்.
குழந்தையை மீட்ட அதிகாரிகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.