இந்தியா விளையாட்டு

தல தோனி வாங்கிய 20 வருட பழமையான கார்! அதன் தனிச்சிறப்பு என்ன தெரியுமா?

Summary:

ms Dhoni buy old car


இந்தியாவில் முதன்முறையாக ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் காரை சொந்தமாக வாங்கிய தோனி, தற்போது 20 வருட பழமையான நிஸான் ஜோங்கா காரை வாங்கி பலரையும் வியக்கவைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் தான் தல தோனி. இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் தமிழகத்தில் தோனிக்கு தனி ஆர்மியே உள்ளது . இவர் சிஎஸ்கே அணிக்கு தலைவராக இருந்து அந்தணியை பலமுறை வெற்றிபெற செய்துள்ளார். 

இந்தியாவின் முக்கிய கிரிக்கெட் வீரரான தல தோனிக்கு நாட்டின் மீதும், இந்திய ராணுவத்தின் மீதும் மிகப்பெரிய பற்று உள்ளது. அதை உறுதி செய்யும் விதத்தில் 20 வருட பழமையான நிஸான் ஜோங்கா 1 டன் காரை சொந்தமாக வாங்கியுள்ளார்.

இந்திய ராணுவம் இந்த மாடல் கார்களை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தது. பல புதிய வாகனங்கள் வந்தபிறகு, இந்த கார்கள் ராணுவ சேவையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. தல தோனி புதியதாக வாங்கியுள்ள இந்த மொடல் 1999ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பச்சை நிறமுடைய கார் ஆகும். மேலும் இதை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவரிடம் இருந்து சொந்தமாக பெற்றுள்ளார்.


Advertisement