பழங்குடியின பெண் கூட்டுப்பலாத்காரம்; உதவிக்காக 1.5 கி.மீ அரைநிர்வாணமாக ஓட்டம். உ.பி-யில் மற்றொரு கொடூரம்.!MP Ujjain Girl Rape 2 Arrested 

 

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டம், மஹாகல், தாஜ்பூர் கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய பழங்குடியின பெண்ணும், அவரின் கணவரும் வேலை தேடி உஜ்ஜைன் பகுதிக்கு வந்துள்ளனர். கணவன் - மனைவியான இவர்கள் இருவரும், திண்டோரி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இது பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதி ஆகும்.

தம்பதிகள் வேலை தேடி இந்திரா நகர் பகுதிக்கு வந்த சமயத்தில், யாதவ் நகரில் வசித்து வரும் இருசக்கர வாகன ஓட்டுநர் ரத்தன் லால் என்பவரின் மகன் ரவி, தம்பதிகளுக்கு வேலை வாங்கித்தருவதாக உஜ்ஜைன் நகரில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள தாஜிபூர், பிசியா கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். வயல்வெளியில் உள்ள வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் இவர்களை அழைத்து சென்றவர், பெண்ணை வீட்டை சுத்தம் செய்யகூறியுள்ளார். 

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் பகீர்; இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. வேலை வாங்கிக்கொடுப்பதாக கொடுமை.!

இருவர் கும்பலால் பெண் பலாத்காரம்

பின் பெண்ணின் கணவரை ரவி மளிகை சாமான் வாங்கி வரலாம் என அழைத்து சென்றுள்ளார். இவர்கள் வீட்டில் இருந்து வெளியேறியதும், ரவியின் நண்பர் இம்மா புரேகா என்பவரின் மகன் இம்ரான் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். ரவி பெண்ணின் கணவரை ஊரின் கடையில் விட்டுவிட்டு, பெண் இருக்கும் வீட்டிற்கு வந்து பலாத்காரம் செய்துள்ளார். கயவர்கள் இருவருமாக கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இவர்களின் பிடியில் இருந்து தப்பிய பெண்மணி, அரைகுறை ஆடையுடன் உதவி கேட்டு 1.5 கி.மீ சாலையில் ஓடி இருக்கிறார். பின் அங்கிருந்து காவல் நிலையம் சென்றவர், தனக்கு நடந்ததை கூறி இருக்கிறார். முதலில் பெண் பழங்குடியின மொழியில் பேசியதால் அதிகாரிகளுக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பின் அவர்களின் மொழி தெரிந்த காவலர் விசாரணை நடத்தியபின் உண்மை தெரியவந்துள்ளது. 

இருவரும் கைது; கால் எலும்பு முறிவு

இதனையடுத்து, பெண் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், குற்றவாளிகள் இரண்டு பேரை கைது செய்தனர். இவர்கள் காவலர்களிடம் தப்பிச் செல்ல முயன்றபோது, கால் இடறி விழுந்து எலும்புகளை முறித்துக்கொண்டனர். இவர்கள் விசாரணைக்கு பின்னர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள் ரவி மற்றும் இம்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: மாரடைப்பு ஏற்பட்டு முன்னாள் இராணுவ வீரர் மரணம்; கேமிராவில் பதிவான இறுதி நொடிகள்.. கலங்கவைக்கும் காட்சி.!