தோழியின் நாயை காப்பாற்ற முயன்று, நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்; கரையேறி உயிர்பிழைத்த நாய்.!

தோழியின் நாயை காப்பாற்ற முயன்று, நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்; கரையேறி உயிர்பிழைத்த நாய்.!


MP Bhopal Man Died Submerge Water While Try To Save Girl Friend Dog from Dam 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பகுதியை சேர்ந்தவர் சாரல் நீகம் (வயது 23). இவர் யுபிஎஸ்இ தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று நீகம் தனது தோழியுடன் அங்குள்ள நீர்த்தேக்கம் ஒன்றுக்கு சென்றுள்ளார். தோழி அவரின் நாயுடன் வருகை தந்ததாக தெரியவருகிறது. 

அப்போது, தோழியின் செல்லப்பிராணி எதிர்பாராத விதமாக நீருக்குள் விழுந்துவிட, அதனை காப்பாற்ற சாரல் முயற்சித்து நீருக்குள் குதித்துள்ளார். 

அப்போது சூழலில் சிக்கிக்கொண்ட சாரல், நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினார். அவர் காப்பாற்ற முயன்ற நாய், நீந்தி கரையேறி உயிர் பிழைத்தது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து தீயணைப்பு படையினரின் உதவியுடன் சாரலின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.