டெல்லி கலவரம்! இப்பதானே திருமணமாச்சு! என் மருமகளுக்கு என்ன சொல்லப்போறேன்! பிணவறைமுன் கதறி துடிக்கும் தாய்!

டெல்லி கலவரம்! இப்பதானே திருமணமாச்சு! என் மருமகளுக்கு என்ன சொல்லப்போறேன்! பிணவறைமுன் கதறி துடிக்கும் தாய்!



mother-loss-son-in-delhi-violence

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் டெல்லி முழுவதும் கலவரபூமியாக மாறியுள்ளது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது, தீ வைக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கலவரத்தால் உயிரிழந்தவர்களின் உடலை வாங்க கிழக்கு டெல்லியில் உள்ள குருதேஜ் பகதூர் மருத்துவமனையின் பிணவறை முன்பு பல உறவினர்கள் கண்ணீருடனும் கதறலுடனும் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் இஸ்லாமிய தாய் ஒருவர் கண்ணீருடன் பிணவறையில் வெளியே தனது மகனின் உடலை பெற காத்திருந்துள்ளார்.

delhi violence

வடகிழக்கு டெல்லி பழைய முஸ்தபாபாத் பகுதியைச் சேர்ந்தவர் தாய் ஹஸ்ரா. இவரது மகன் அஷ்பக் ஹுசேன். இவருக்கு  காதலர் தினமான பிப்ரவரி 14- அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கலவரத்தில் ஐந்து துப்பாக்கி குண்டுகள் அஷ்ஃபக்கின் உடலில் பாய்ந்தது எனவும் அதில் மூன்று குண்டுகள் அவனது நெஞ்சில் பாய்ந்து உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது. அவரது உடல்  பிரேதபரிசோதனைக்காக ஜி.டி.பி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது தாய் ஹஸ்ரா, என் மகனை கொன்று விட்டார்கள். திருமணமாகி 11 நாட்களில் அஸ்வத் உயிரிழந்துள்ளார், என் மருமகளுக்கு என்ன பதில் சொல்லப் போறேன்.அவளது எதிர்காலம் என்னாவது என்று கதறி அழுதுள்ளார். இது அங்கிருப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.