இந்தியா

அட இப்படியும் இருப்பாங்களா.. மருமகளுக்கு கொரோனாவை பரப்ப மாமியார் செய்த மோசமான காரியம்! அதிர்ச்சி சம்பவம்!!

Summary:

காலங்காலமாக மாமியார்-மருமகள் சண்டை என்பது மாறாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்தநிலையில் தன

காலங்காலமாக மாமியார்-மருமகள் சண்டை என்பது மாறாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்தநிலையில் தனது மருமகளை பழிவாங்குவதற்காக மிகவும் வில்லங்கதனமாக மாமியார் கொரோனோ வைரஸை பயன்படுத்திய சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம், ராஜன்னா சிர்சிலா மாவட்டத்தைச் சேர்ந்த நெமிலிகுட்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, காமரெட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான சில நாட்களில் இருந்தே அந்த பெண்ணுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு, பிரச்சினையாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த வாரம் பெண்ணின் மாமியாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அந்த மாமியார் தனது மருமகளை பழிவாங்க எண்ணி அவருக்கும் கொரோனோ வைரஸை பரப்புவதற்காக வேண்டுமென்றே அவ்வப்போது அந்த பெண்ணை கட்டிப்பிடித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது.

பின்னர் அதனை காரணம் காட்டி அந்த வில்லங்கமான மாமியார் மருமகளை வீட்டிலிருந்து துரத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் கணவரும் கடந்த 7 மாதங்களாக ஒரிசாவில் ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வருவதால் அவராலும் உதவ முடியவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய அப்பெண் வேறு வழியின்றி தனது சகோதரி வீட்டிற்கு சென்று, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Advertisement