கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்... ஆட்டோ டிரைவர் மீது கொலை வெறி தாக்குதல்.!! தாய், மகன் கைது.!!



mother-and-son-smashed-auto-driver-genitals-with-cylind

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளக்காதலை கைவிட்ட ஆட்டோ டிரைவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தாய் மற்றும் மகனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ். ஆட்டோ டிரைவரான இவருக்கு பெண் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சந்திரபிரகாஷ் திடீரென தனது கள்ளக்காதலை கைவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் தனது மகனுடன் சேர்ந்து சந்திர பிரகாஷை பழிவாங்க முடிவு செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த நபரை தாயும் மகனும் சேர்ந்து ஒரு அறையில் பூட்டி வைத்துள்ளனர்.

India

இதன் பிறகு சமையல் செய்யும் சிலிண்டரை வைத்து சந்திர பிரகாஷின் அந்தரங்க உறுப்பில் கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த சந்திர பிரகாஷ் இறந்து விடுவார் என அஞ்சியதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சந்திர பிரகாஷுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடைஞ்சல்... 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.!!

இந்த சம்பவம் தொடர்பாக சந்திர பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் தாய் மற்றும் மகனை கைது செய்துள்ள பஞ்சாப் போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: அண்ணியுடன் முறை தவறிய காதல்... இளைஞர் படுகொலை.!! அண்ணன் கைது.!!