சாலையில் அனாதையாக கிடந்த 6480 ரூபாய்..! கண்முன்னே கிடந்தும் யாரும் பணத்தை சீண்டாத நிலை.!
சாலையில் அனாதையாக கிடந்த 6480 ரூபாய்..! கண்முன்னே கிடந்தும் யாரும் பணத்தை சீண்டாத நிலை.!

மத்யபிரேதேச மாநிலத்தில் கொரோனா அச்சம் காரணமாக சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் யாரும் எடுக்காத சம்பவம் நடந்துள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவை பொறுத்தவரை மஹாராஷ்டிரா மாநிலம் அதிக பாதிப்புகளையும், உயிர் இழப்புகளையும் சந்தித்துவருகிறது.
இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம், ஹிரா நகர் பகுதியில் உள்ள பிரதான சாலையில், 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்துள்ளன. கொரோனா அச்சம் காரணமாக அந்த வழியாக சென்ற யாரும் அந்த ரூபாய் நோட்டுகளை எடுக்கவில்லை. பின்னர் அங்கு வந்த போலீசார் கையுறைகளை பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை எடுத்தனர்.
பின்னர் கிருமி நாசினி கொண்டு ரூபாய் நோட்டுகள் சுத்தம் செய்யப்பட்டது. அதில் சுமார் ரூ.6480 இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரும் பணத்தை உரிமை கோரவில்லை. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள CCTV காட்சிகளை போலீசார் சோதனை செய்துவருகின்றனர்.
கொரோனாவை பரப்ப வேண்டுமென்றே யாரேனும் போட்டு சென்றார்களா? அல்லது பணத்தை யாரும் தவற விட்டார்களா என போலீசார் கண்டறிய இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.