இந்தியா

டிவி பார்ப்பதில் தகராறு.! எப்போ பார்த்தாலும் செய்தி சேனல்..! கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் 3 வயது குழந்தை பலி.!

Summary:

தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தைக்கு ஆதரவாக இருந்த 3 வயது குழந்தையை, பெற்ற தாய் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் நகர்பவி பகுதியில் குடியிருப்பு ஒன்றில் கடந்த செவ்வாய் கிழமை குடும்பத்துடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது கணவன் செய்தி சேனலை பார்த்துள்ளார். ஆனால் மனைவி பொழுதுபோக்கு சேனலை பார்க்கவேண்டும் என கூறியுள்ளார். இதனால் தொலைக்காட்சி பார்ப்பதில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

எப்போ பார்த்தாலும் செய்தி சேனல்களை பார்ப்பதா என கோபம் கொண்ட அவருடைய மனைவி ஆத்திரம் அடைந்து கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். எப்போதும் செய்தி சேனல்களை மட்டுமே பார்ப்பதாக இருந்தால் வீட்டுக்கே வரவேண்டாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

பெற்றோரின் சண்டையினை இடைமறித்த அவரது குழந்தை தந்தைக்கு ஆதரவாக தாயிடம் பேசியிருக்கிரார். அப்பா அவருக்கு பிடிச்ச சேனலையே பார்க்கட்டும் என குழந்தை தந்தைக்கு ஆதரவாக பேசியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாய் 3 வயது குழந்தையை கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது தனது குழந்தையை ஆத்திரத்தில் கொலை செய்ததை அந்தத் தாய் ஒப்புக்கொண்டார். பெற்ற மகள் என்றும் பாராமல் தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த தாயை போலீசார் கைதுசெய்துள்ளனர்.


Advertisement