BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மகன்! தாய் எடுத்த விபரீத முடிவு!
காஷ்மீர் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வியடைந்ததால், வேதனையில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் தேவி என்பவரது மகன் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவு வெளியான நிலையில் அந்த மாணவன் தோல்வியடைந்ததால் மாணவனின் தாய் தேவி வேதனையடைந்துள்ளார். இந்தநிலையில் தேவி நேற்று அவரது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனைப்பார்த்த அவரது உறவினர்கள், தேவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் தேவியை பரிசோதித்த மருத்துவர்கள், தேவி விஷம் குடித்ததால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உறவினர்கள் கூறுகையில் தேவியின் மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறினர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.