தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி அசத்தல் பேச்சு!

தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி அசத்தல் பேச்சு!



modi-talk-about-thirukural-in-independence-day-speech


நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இதற்காக நாட்டு மக்களுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார் மோடி. இன்று காலை 7.30 மணியளவில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினர். அத்துடன் ராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். 

செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி, சுதந்திர தின உரையாற்றினார். தனது அரசின் சாதனைகள், நாட்டு நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கமாக மோடி பேசினார். தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுகையில் தமிழில் நீரின்றி அமையாது உலகு என திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.

நீர் பிரச்னையை தீர்க்க ஜல் ஜீவன் என்ற புதிய திட்டத்திற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய மோடி,  திருவள்ளுவர் கூறியது போல், "நீரின்றி அமையாது உலகு". 70 ஆண்டுகளில் செய்யாததை 4 ஆண்டுகளில் செயல்படுத்துவோம் என தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமை அடைவோம், நாட்டில் ஊழல் பெரிய வியாதி போல வளர்ந்து இருக்கிறது. நாட்டின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதால் நாட்டில் வறுமையை போக்க முடியும் என தெரிவித்தார்.