ஒட்டுண்ணி அரசியல்.... 30 வருஷ உறவுக்கு செய்த துரோகம்! திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்! பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!!!



modi-slams-congress-dmk-alliance-karnataka

கர்நாடகாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியையும் அதன் கூட்டணி அரசியலையும் கடுமையாக விமர்சித்தார். தமிழக அரசியல் சூழலையும் தனது உரையில் குறிப்பிட்ட அவர், திமுக - காங்கிரஸ் உறவை சுட்டிக்காட்டி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பாஜக தொண்டர்கள் திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய மோடி, காங்கிரஸ் கட்சி மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், தற்போது பிராந்திய கட்சிகளின் ஆதரவை நம்பியே செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

‘ஒட்டுண்ணி அரசியலாக மாறிவிட்டது’

காங்கிரஸ் குறித்து பேசிய பிரதமர் மோடி, “போலி வாக்குறுதிகளால் மக்கள் நம்பிக்கையை அந்தக் கட்சி இழந்துவிட்டது. எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் அதிருப்தி அடைகிறார்கள்,” என்றார்.

இதையும் படிங்க: அம்மாவின் ஆன்மாவை விரட்டிவிட்ட ஓபிஎஸ்! அதிமுக வில் யார் வேணாலும் அந்த பதவிக்கு வரலாம்..... ஆனால் திமுக வில் அது மட்டும் நடக்காது! ஸ்டாலினுக்கு எடப்பாடி கொடுத்த பதிலடி!!!

மேலும், தற்போது காங்கிரஸ் தனித்து செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், பிராந்திய கட்சிகளின் தயவில் இயங்கும் ‘ஒட்டுண்ணி’ அரசியல் சக்தியாக மாறியுள்ளதாகவும் விமர்சித்தார்.

திமுக - காங்கிரஸ் உறவை குறிப்பிட்ட மோடி

தமிழக அரசியல் குறித்து பேசும்போது, “கடந்த 30 ஆண்டுகளாக திமுகவும் காங்கிரஸும் நெருங்கிய உறவில் இருந்துள்ளன. பல நெருக்கடிகளில் காங்கிரஸை காப்பாற்றியது திமுகதான். 2014-க்கு முன் இருந்த 10 ஆண்டு ஆட்சியும் திமுக ஆதரவால் நீடித்தது,” என்று கூறினார்.

அதன்பின், அதிகாரத்திற்காக காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளையே விட்டு விலகும் இயல்புடையது என்றும், “கூட்டணிக் கட்சியின் முதுகில் குத்துவதே காங்கிரஸ் அரசியலின் அடையாளம்” என்றும் கடுமையாக சாடினார்.

பாஜக வளர்ச்சியை எடுத்துக்காட்டிய பிரதமர்

பாஜகவின் வளர்ச்சி குறித்து பேசிய மோடி, “ஒரு காலத்தில் 400 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இன்று 100 இடங்களைத் தாண்டவே போராடுகிறது. ஆனால் பாஜக நாடு முழுவதும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது,” என்றார்.

மேற்கு வங்கத்தில் சில எம்.எல்.ஏ-க்களுடன் இருந்த பாஜக இன்று வலுவான சக்தியாக மாறியுள்ளதாகவும், கேரளாவிலும் கட்சியின் ஆதரவு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். அங்கு பாஜக பெரும்பான்மை பெறும் நாள் தொலைவில் இல்லை என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

உரையின் இறுதியில், “நிர்வாக திறன் இல்லாத காங்கிரஸின் அரசியல் புத்தகத்தில் பொய்களும் துரோகங்களும் மட்டுமே நிறைந்துள்ளன,” என்று பிரதமர் மோடி காட்டமாக விமர்சித்தார்.

 

இதையும் படிங்க: BREAKING: அடுத்தடுத்து அடிக்கும் விஜய்! திமுக கூட்டணி உடைந்தது...... ஸ்டாலினின் அறிக்கைக்கும் பிறகும் நடந்த அதிரடி மாற்றம்! அரசியலில் புதிய பரபரப்பு!!!