இந்தியா

மீண்டும் அணைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..! கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து நடைபெறும் ஆலோசனை.

Summary:

Modi meets all state CM on coming April 27th

அணைத்து மாநில முதல்வர்களுடனும் வரும் 27 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா காரணமாக இந்தியாவில் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. முன்னதாக ஏப்ரல் 14 வரை விதிக்கப்பட்ட ஊரடங்கு அதிகரித்துவந்த கொரோனா தொற்றால் மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு வரும் மே 3 அன்று முடிவடைகிறது. இதனிடையே கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் ஏற்கனவே அணைத்து மாநில முதலர்களுடன் வீடியோ கால் மூலம் ஆலோசனை நடத்தினர்.

தற்போது வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி மீண்டும் அணைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது.


Advertisement