கொரோனாவை கட்டுப்படுத்த, பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு விடுத்த 7 வேண்டுகோள்கள்!

கொரோனாவை கட்டுப்படுத்த, பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு விடுத்த 7 வேண்டுகோள்கள்!



modi-7-request-to-india-people

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

 இந்நிலையில் கொரோனோவை முற்றிலும் கட்டுபடுத்த இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 14 இன்று முதல் 19 நாட்களுக்கு  ஊரடங்கை நீட்டித்துள்ளார். அதாவது நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு  நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

modi

இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு பின்பற்ற கோரி ஏழு முக்கிய வேண்டுகோள்கள் விடுத்துள்ளார்
1. வீட்டிலுள்ள வயதில் முதியவர்களுக்கு கூடுதல் கவனிப்பு செலுத்த வேண்டும்.
2.சமூக இடைவெளியை மக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்
3.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்
4. கொரோனா நோயை கண்டறியும் ஆரோக்கிய சேது என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
5.ஏழை எளிய மக்களுக்கு உதவுங்கள் 
6. கொரோனோவை தடுக்க போராடிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் காவல்துறையினரின் சேவையை மதியுங்கள்.
7. மக்கள் வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்