டூ லெட்-ஆ டூ-லேட்டா?.. நூதன முறையில் வாடகை வீடு விளம்பரம்.. இது புது லெவல் மார்க்கெட்டிங் தான்.!

டூ லெட்-ஆ டூ-லேட்டா?.. நூதன முறையில் வாடகை வீடு விளம்பரம்.. இது புது லெவல் மார்க்கெட்டிங் தான்.!



 Modern style of rental house advertising banglore

இன்றளவில் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கு தெரிந்த வகையில் விளம்பரங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பெங்களூரு பகுதியில் வீடு வாடகைக்கு விட ஆங்கிலத்தில் எழுதிய சம்பவம் ஒன்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

இது அந்த வீட்டின் விளம்பர படத்தை நுட்பமாக்க செயல்பட்டனரா? அல்லது தவறுதலாக இவ்வாறு பதிவு செய்யப்பட்டதா? என்பது குறித்த விபரங்கள் இல்லை. இது தொடர்பான விளம்பரத்தில் ஆங்கிலத்தில் 'To-Late Rent/Sale 1 RK, 1,2,3 BHK' என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

பொதுவாக வீடுகளை வாடகைக்கு விடும்போது டூ லெட் (To-let) என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் இங்கு மிகவும் வித்தியாசமான முறையில் டூ லேட் (To-Late) என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.