விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்கள் பணி பெரிய சிக்கல்! மத்திய விமான போக்குவரத்து மந்திரி

விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்கள் பணி பெரிய சிக்கல்! மத்திய விமான போக்குவரத்து மந்திரி



minister-talk-about-flight-accident

 

நேற்று பிற்பகல் 3 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 7.40 மணிக்குதுபாயில் இருந்து 191 பேருடன் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் தரையிறங்கிய போது விமானம் கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்தத்தில் தற்போதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விமான விபத்தில் விமானி உள்பட 18 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு  அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு  போலீசார், தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது துரதிர்ஷ்டவசமானது. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பருவமழை பொழிவால் ஏற்பட்ட சறுக்கலான நிலையால், 190 பயணிகளுடன் வந்த இந்த விமானம் ஓடுதள பாதையில் இருந்து விலகி சென்றுள்ளது என தெரிவித்துள்ளார். 

ஒருவேளை விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும்.  நான் விமான நிலையத்திற்கு செல்ல இருக்கிறேன் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.