"ரோடு போட துபாய் இளவரசர் அழைத்தார்." நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பெருமிதம்.!



minister nitin gadkari about dubai princess

கடந்த 2023-ம் ஆண்டு கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காகவும் எத்தனால் கலந்த பெட்ரோல் நாடு முழுதும் 20% அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு எதிராக நிபுணர்களும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக குரல் கொடுத்தனர். 

இது மைலேஜ் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரியின் மகன்கள் எத்தனால் உற்பத்தி ஆலைகளை நடத்துவதாகவும், அவர்களின் குடும்ப ஆதாயத்திற்காக தான் இந்த வகை பெட்ரோல் ஊக்குவிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

Nitin kadkari

இந்த நிலையில், மத்தியமைச்சர் நிதின் கட்கரி இது குறித்து விளக்கம் அளித்த போது, "எப்படி நியாயமாக சம்பாதிப்பது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு பண பிரச்சனை எதுவும் இல்லை. இந்த திட்டங்களை எல்லாம் சொந்த நலனுக்காக நான் கொண்டு வரவில்லை. 

இதையும் படிங்க: பாஜக மகளிரணி நிர்வாகி தற்கொலை.. உருக்கமான கடிதம்.. கைப்பற்றிய போலீஸ்.! 

என் மூளை ஒவ்வொரு மாதமும் ரூ.200 கோடி சம்பாதிக்கும் திறன் கொண்டது. துபாயில் சாலைகளை மேம்படுத்த என்னை துபாய் இளவரசர் 6 மாதம் அழைத்தார். இது பற்றி மோடியிடம் அவர் கோரிக்கை வைத்தார். அந்த அளவிற்கு இந்தியாவின் சாலைகளை நான் சிறப்பாக அமைத்துள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜிலேபியும் சமோசாவும் ஆபத்தான உணவா! லேபிளில் எச்சரிக்கை வாசகமா! மத்திய சுகாதாரத் துறை புதிய நடவடிக்கை....