உயிரிழந்த தாய்.! 4 நாட்களாக சடலத்துடனே இருந்த மனநலம் பாதிக்கபட்ட மகள்.! பின் நேர்ந்த துயரம்!!mentally-affected-daughter-stay-with-dead-mother

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம்  முதுகோபாடி அருகே தாசனஹடி பகுதியில் வசித்து வந்தவர் 62 வயது நிறைந்த ஜெயந்தி ஷெட்டி.  இவரது மகள் பிரகதி ஷெட்டி. 32 வயது நிறைந்த அவர் இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். 15 வருடங்களுக்கு முன்பே கணவர் இறந்த நிலையில் ஜெயந்தியே மனநலம் பாதித்த தனது மகளை கவனித்து வந்துள்ளார்.

மனநலம் பாதிக்கபட்ட மகள் 

மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயந்திக்கு அண்மையில் கால் ஒன்றும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் பிரகதியை மிகவும் சிரமப்பட்டே கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாகவே ஜெயந்தி வீட்டில் லைட் எரியாமல் இருந்துள்ளது. மேலும் வீடும் மூடியே இருந்துள்ளது.அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்தில் வசிப்பவர்கள் ஜெயந்தியின் செல்போனுக்கு போன் செய்துள்ளனர். வீட்டுக்குள் செல்போன் சத்தம் கேட்டுள்ளது.

இதையும் படிங்க: திருநங்கையுடன் 20 வருட லிவிங் டு கெதர்.. வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்.. போலீசுக்கு அதிர்ச்சி.!

சர்க்கரை நோயால் உயிரிழந்த தாய் 

ஆனால் ஜெயந்தி போனை எடுத்து பேசவில்லை. பின்னர் அவர்கள் ஜன்னலை திறந்து பார்த்தபோது பிரகதி மயங்கி நிலையில் கிடந்துள்ளார். உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ஜெயந்தி பிணமாக அழுகிய நிலையில் கிடந்துள்ளார். அம்மா இறந்தது கூட தெரியாமல் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தண்ணீர், உணவு இல்லாமல் நான்கு நாட்களாக அவரது பக்கத்திலேயே இருந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். பின் பிரகதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

மகளுக்கும் நேர்ந்த சோகம் 

மேலும் விசாரணையில் மருத்துவர்கள் சர்க்கரை நோயால் உயிரிழந்ததாகவும், அவர் பக்கத்திலேயே சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் இருந்ததால் மகள் பிரகதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாத்ரூமில் தனக்கு தானே பிரசவம்.! பிய்ந்து கையோடு வந்த கால்கள்.! இளம்நர்ஸ் செய்த அதிர்ச்சி காரியம்!!