விபத்தில் சிக்கியவருக்கு இப்படி ஒரு நிலையா?.. பிளேடோடு தைத்து அனுப்பிய அரசு மருத்துவர்கள்.. வலியால் துடித்த இளைஞர்.!



Medical Negligence Shock Surgical Blade Found Inside Patient’s Leg After 1.5 Years in Andhra Pradesh 

விபத்தில் காயமடைந்தவருக்கு காலில் சிசேரியன் பிளேடு வைத்து தைத்து மருத்துவர்கள் அனுப்பி உள்ளனர். ஒரு வருடத்துக்கு பின் போல்டை அகற்ற சென்றவருக்கு இந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டம் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் சின்னா (வயது 25 ). இவர் அங்குள்ள அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விசாகப்பட்டினத்தில் செயல்படும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

1 வருடமாக கால் வலியால் துடித்த இளைஞர்:

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரது கால் வலி மோசமாகி இருக்கிறது. உள்ளே ஒரு கம்பி வைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரியவரும் நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் வெளிப்புற போல்டை அகற்றினால் அது சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தாயை தரதரவென இழுத்து உதைத்து செருப்பால் அடித்த மகள்.. கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு முன் அரங்கேறிய கொடூரம்.!

மருத்துவர்களின் அலட்சியம்:

பின் வீட்டிற்கு திரும்பிய சின்னா நாளுக்கு நாள் கால் வலியால் அவதிபட்டுள்ளார். இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று போல்ட்டை அகற்ற கேட்டபோது அவரது கால் உள்ளே சிசேரியன் பிளேடு வைத்து தையல் போடப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவர்கள் காலில் இருந்த சிசேரியன் பிளேடை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

நியாயம் கேட்டவரை ஊழியரை வைத்து தாக்கிய மருத்துவர்கள்:

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதன் காரணமாகவே சின்னாவுக்கு கால் வலி இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்ட மருத்துவர்களிடம் சின்னா கேட்ட போது அவர்கள் மருத்துவமனை ஊழியரை வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இளைஞர் புகார் அளிக்கவே, சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விசாரிக்க தலைமை மருத்துவர் உத்தரவிட்டுள்ளார்.