தாயை தரதரவென இழுத்து உதைத்து செருப்பால் அடித்த மகள்.. கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு முன் அரங்கேறிய கொடூரம்.!



Daughter Beats Elderly Mother in Broad Daylight Outside Moodushedde Panchayat in Mangaluru

மங்களூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தாயை மகள் காலால் உதைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சண கன்னடா மாவட்டம் மங்களூர் புறநகர் பகுதியில் மூட்ஷெட்டே கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தாயும், மகளும் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வயதான தாய் தனது மகள் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் இருவரையும் சமாதானம் செய்து காவல்துறையினர் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. 

தாயை உதைத்து தாக்கிய மகள்:

இந்த குடும்பச் சண்டை நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது மகள் மீது மூதாட்டி புகார் அளிக்க கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த மகள் அங்கு நேரடியாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் ஒரு கட்டத்தில் தனது தாயென்றும் பாராது மூதாட்டியை கீழே தள்ளி காலால் எட்டி உதைத்து தாக்கியிருக்கிறார். 

இதையும் படிங்க: சாதி வெறியால் மகளின் காதலனை கொன்ற குடும்பம்.. சடலத்தை மணந்த காதலி.. கலங்கவைக்கும் வீடியோ.!

பெண்ணின் செயலுக்கு கண்டனம்:

முதலில் பேசிக்கொண்டிருந்த பெண்மணி திடீரென அவரை தள்ளிவிட்டு முடியை இழுத்து செருப்பால் தாக்குகிறார். தாய் கதறி அழுதும் அவரை சரமாரியாக தாக்குகிறார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி அங்கிருந்தவர்களால் எடுக்கப்பட்டு சமூகவலைத்தளத்தில் வெளியாகிய நிலையில், பலரும் பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், வீடியோவை பரப்பிய நபரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

முடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கிய வீடியோ: