"பானி புயல்" இது யார் வைத்த பெயர்? என்ன அர்த்தம்?
"பானி புயல்" இது யார் வைத்த பெயர்? என்ன அர்த்தம்?

சென்னை அருகே வங்கக்கடலில் கடந்த மாதம் 25-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது புயலாக மாறி அதற்கு பானி என பெயரிட்டனர். பானி புயல் தமிழ்நாட்டை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் மழை பெய்யும் என கூறப்பட்டது.
ஆனால் பானி புயல் தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்றது. இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏதும் இல்லை என தெரிவித்தனர். ஒடிசாவில் மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல மாவட்டங்களில் மரங்கள்,மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து பல வீடுகள் சேதமடைந்துள்ளது.
எந்த புயல் உருவானாலும் புயல்களுக்கு பெயர் சூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் வங்க கடலில் உருவாகி நேற்று காலை ஒடிசாவை தாக்கிய புயலுக்கு ‘பானி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இது இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம் சூட்டிய பெயர் ஆகும்.
அந்த நாட்டு மொழியில் பானி என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தம். பெயருக்கு ஏற்றாற்போல நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவது போன்றே, பானி புயல் ஒடிசாவில் ருத்ரதாண்டவம் ஆடி பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.