மத்தியப்பிரதேசம்: நாய்க்குட்டியை கொடூரமாக கொலை செய்த நபர்... முதல்வர் கண்டனம்!!

மத்தியப்பிரதேசம்: நாய்க்குட்டியை கொடூரமாக கொலை செய்த நபர்... முதல்வர் கண்டனம்!!


Mathiya pradhash one man killed dog urgently

மத்தியப்பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தெருவில் இருந்த நாயை கொடூரமாக கொலை செய்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த நபர் மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வீடியோவில் அந்த நபர் நாய்க் குட்டி ஒன்றினை தூக்கி வீசியும், ஓங்கி மிதித்தும் கொலை செய்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவின. இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் தளத்தில் முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். அதற்கு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், விரைவில் குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்.

Urgently

அதனையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டதாக குணா மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் குற்றவாளியின் மனநிலை குறித்தும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.