பப்ஜி கேம் மோகத்தால் உருவான கள்ளக்காதல்! கணவரிடம் விவாகரத்து கேட்கும் மனைவி - TamilSpark
TamilSpark Logo
இந்தியா விளையாட்டு லைப் ஸ்டைல் சமூகம்

பப்ஜி கேம் மோகத்தால் உருவான கள்ளக்காதல்! கணவரிடம் விவாகரத்து கேட்கும் மனைவி

அஹமதாபாத்தில் பப்ஜி கேமிற்கு அடிமையான பெண் ஒருவர் ஒரே குழுவில் ஆடிய மற்றொரு ஆணுடன் ஏற்பட்ட காதலால் தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஹமதாபாத்தில் அபயம் என்ற பெண்களுக்கான திண்டு நிறுவனம் 181 என்ற உதவி எண் மூலம் பெண்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 550 அழைப்புகள் உதவியை தேடி வருகிறதாம். அதில் குறைந்தது 90 நபர்களையாவது அந்த குழுவில் இருக்கும் பெண்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவி வருகின்றனர்.

pubg mobile க்கான பட முடிவு

சமீபத்தில் அவர்களுக்கு ஒரு பெண்ணிடமிருந்து விசித்திரமான உதவி கோரப்பட்டுள்ளது. அஹமதாபாத்தை சேர்ந்த அந்த பெண் முதலில் கால் செய்து தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். பின்னர் அந்த குழுவை சேர்ந்த சோனல் சகதிய என்ற பெண் விவாகரத்து கோரிய பேனை வீட்டில் சென்று நேரில் சந்தித்துள்ளார்.

அப்போது அவரிடம் விவாகரத்து கேட்க என்ன காரணம் என கேட்டுள்ளார். 19 வயதாகும் அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. அவர் விவகாரத்திற்கான கூறிய காரணம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அதாவது பப்ஜி கேமிற்கு அடிமையான அந்த பெண் தன்னுடன் தினமும் குழுவாக இணைந்து விளையாடும் அதே ஊரை சேர்ந்த மற்றொரு நபருடன் சேர்ந்து வாழவே விவாகரத்து கோரியுள்ளார்.

இவரின் காரணத்தை கேட்டு அந்த குழுவினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக தங்களின் குழந்தைகள் தான் பப்ஜி கேமிற்கு அடிமையாகிவிட்டதாகவும் அவர்களை அதிலிருந்து மீட்டுவர உதவி செய்யுமாறும் கோரிக்கை வைப்பர். ஆனால் இந்த பெண் தொடர்ந்து தான் காதலருடன் தினமும் பப்ஜி கேம் விளையாடுவதற்காக விவாகரத்து கோரியுள்ளார்.

pubg mobile க்கான பட முடிவு

இதனை தொடர்ந்து அந்த குழுவை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணிற்கு அறிவுரை கூறியுள்ளனர். மேலும் ஒரு விளையாட்டிற்காக விவாகரத்து கோருவது சிறந்தது அல்ல, எனவே அவரது முடிவினை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளனர். மேலும் இந்த விளையாட்டில் இருந்து விடுபட சில காலம் மறுவாழ்வு மையத்தில் இருக்குமாறும் கூறியுள்ளனர்.

ஆனால் அந்த பெண் அதற்கு சம்மதிக்கவில்லை. காரணம் மறுவாழ்வு மையத்தில் மொபைல் போன்கள் பயன்படுத்த முடியாது என்பதால் தான். கடைசியில் அந்த பெண், தனது முடிவை மாற்றிக்கொள்ள தான் முயற்சி செய்வதாகவும், அதற்கு சில நாட்கள் அவகாசம் தரும்படியும் கேட்டுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo