இந்தியா

மர்மமான முறையில் கிழிந்து தொங்கும் உள்ளாடைகள்.. பெண்கள் விடுதியில் ஏற்பட்ட பரபரப்பு..

Summary:

Marmamana muraiyil kilinthu thonkum ullaidaigal

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் அருகே விஜய் நகர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதி மற்றும் பெண்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டை மட்டும் இரவில் தேடி செல்லும் மர்ம நபர் அங்குள்ள பெண்களின் உள்ளாடைகளை கிழித்து எறிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இரவு நேரம் அல்லது வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து பெண்கள் அறையில் நுழையும் மர்ம நபர் அங்குள்ள உள்ளாடைகளை கிழித்து போட்டு விட்டு சென்று விடுவார். இச்சம்பவம் குறித்து பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த நபரை பல நாட்களாக பிடிக்க முடியாமல் போயிருந்தது. 

அதனை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் அந்த மர்ம நபரை தேடி வந்துள்ளனர். அதே போல் ஒரு நாள் அந்த மர்ம நபர் பெண்கள் அறையில் உள்ளே நுழையும் போது போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அதனை அடுத்து போலீசார் அந்த மர்ம நபரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த இளைஞர் பெயர் ஸ்ரீகாந்த் (26) என்பதும், அவர் இதற்கு முன்பு செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த இளைஞர் மீது திருட்டு மற்றும் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றது போன்ற புகார்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பெண்களின் உள்ளாடைகளை கிழித்து போட்டது தான் எனவும் அந்த இளைஞர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


Advertisement