"பாம்புக்கு முத்தம்" கொடுத்த இளைஞர்! அதன் பின் நடந்த விபரீதம்! பதறவைக்கும் வீடியோ காட்சி!

"பாம்புக்கு முத்தம்" கொடுத்த இளைஞர்! அதன் பின் நடந்த விபரீதம்! பதறவைக்கும் வீடியோ காட்சி!


Man tried to kiss snake viral video

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்ற பயமும்தான் காரணம். என்னதான் பெரிய வீரனாக இருந்தாலும், பாம்பை பார்த்தால் சற்று ஜகா வாங்கத்தான் செய்வார்கள்.

ஆனால், ஒருசிலர் பாம்பை விளையாட்டு பொருள் போல் பார்ப்பதும், பாம்பை பிடித்து இடுப்பில் கட்டுவது, அதற்கு முத்தம் கொடுப்பது, கழுத்தில் மாலையாக அணிவது இப்படி விசித்திரமான செயல்களில் ஈடுபடுவார்கள். இது ஒருசில நேரங்களில் விளையாட்டாக இருந்தாலும் அதுவே பல நேரங்களில் விபரீதமாகவும் முடிகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் பாம்பிற்கு முத்தம் கொடுக்க முயல்கிறார். அதுவரை அமைதியாக இருந்த பாம்பு அந்த இளைஞர் முத்தம் கொடுக்க அருகில் வந்ததும் வேகமாக தாவி அவரது வாயில் கொத்துகிறது, உடனே பாம்பை உதறிவிட்டு மீண்டும் அந்த பாம்பை பிடிக்கிறார் அந்த இளைஞர். இந்த காட்சி வீடியோவாக பதிவாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.