இந்தியா

இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட திருடன் 9 மாதத்திற்கு பிறகு கைது! நடந்தது என்ன? ஷாக் சம்பவம்.!

Summary:

இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட திருடன் 9 மாதத்திற்கு பிறகு கைது! நடந்தது என்ன? ஷாக் சம்பவம்.!

மத்தியபிரதேச மாநிலம் ஷதார்பூர் மாவட்டம் பமிதா என்ற பகுதியில் சுதிர் அகர்வால் என்பவர் கடை வைத்துள்ளார். அங்கு சரக்குகளை டெலிவரி கொடுக்கும் வாகன டிரைவராக நாம்தியோ என்பவர் வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் கடையில் இருந்து இரும்புக் கம்பிகளை ராஜ்நகரில் உள்ள வாடிக்கையாளரிடம் வழங்கிவிட்டு பணத்தை வாங்கி வருமாறு சுதிர் அகர்வால் நாம்தியோவிடம் 
கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் இரும்பு கம்பியை டெலிவரி செய்துவிட்டு 6.65லட்சம் பணத்தையும் பெற்று கொண்டுள்ளார். ஆனால் அவர் கடைக்கு திரும்பவில்லை. வாகனத்தை கடைக்கு அருகே நிறுத்திவிட்டு மாயமாகியுள்ளார். இதுகுறித்து சுதிர் அகர்வால் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் அவர்கள் நாம்தியோவை தேடி வந்துள்ளனர். சில நாட்களுக்கு பின்  அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடைத்துள்ளது. அது நாம்தியோதான் என கூறி அவரது குடும்பத்தினர்கள் இறுதி சடங்கு மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் டிஎன்ஏ சோதனையில் அவர் நாம்தியோ இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், சுதிர் சமீபத்தில் கோவில் ஒன்றுக்கு சென்றபோது அங்கு நாம்தியோவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அவரிடம்  பேசியபோது, போலீஸ் ஆவணப்படி தான் இறந்துவிட்டேன். என்னிடம் பணத்தை  கேட்டால் விபரீதத்தை சந்திப்பீர்கள் என மிரட்டியுள்ளார். இது குறித்து சுதிர் போலீசில் புகாரளித்ததை தொடர்ந்து போலீசார் நாம்தியோவை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து 5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

    


Advertisement