"குடும்பத்தை சீரழித்த சந்தேகம்..." மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்த கணவன்.!! அனாதையான 3 குழந்தைகள்.!!



man-shot-wife-and-commits-suicide-suspicious-instinct-d

உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவர் அவரை சுட்டு கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகேஷ் நிஷாத். இவருக்கு குடியாதேவி என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முகேஷுக்கு தனது மனைவி வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகம் வந்திருக்கிறது. இதனால் அடிக்கடி தனது மனைவியான குடியாதேவியிடம் பிரச்சனையில் ஈடுபட்டிருக்கிறார்.

India

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இது தொடர்பாக கணவன் மற்றும் மனைவியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முகேஷ் தன் வீட்டிலிருந்த நாட்டுத் துப்பாக்கியால் மனைவியை சுட்டு படுகொலை செய்துள்ளார். பின்னர் அதே துப்பாக்கியால் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் வீட்டிலிருந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று பார்த்தனர்.

இதையும் படிங்க: திருமணமான 4 மாதத்தில் கொடூரம்... மனைவி, மச்சினன் படுகொலை.!! இளைஞர் வெறி செயல்.!!

அப்போது முகேஷ் மற்றும் குடியா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்திருக்கிறது. மேலும் தாய் மற்றும் தந்தை இறந்ததால் யாரும் இல்லாமல் அழுது கொண்டிருந்த 3 குழந்தைகள் காண்போரை கண்கலங்க வைத்தன.

இதையும் படிங்க: துயரத்தின் உச்சம்... பெத்த குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை.!! போலீஸ் விசாரணை.!!