திருமணமான 4 மாதத்தில் கொடூரம்... மனைவி, மச்சினன் படுகொலை.!! இளைஞர் வெறி செயல்.!!



man-murdered-wife-and-brother-in-law-and-commits-suicid

டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த இளைஞர் தனது மனைவி மற்றும் மனைவியின் சகோதரரை படுகொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லி அருகேயிருக்கும் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் பப்பு லால். 22 வயதான இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜஸ்வந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதல் கணவன் மற்றும் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று பப்பு லால் தனது மனைவியுடன் தகராறு செய்திருக்கிறார்.

India

அப்போது இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மிகப்பெரிய தகராறாக மாறியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த பப்பு லால் தனது மனைவி ஜஸ்வந்தியை கல்லால் அடித்து படுகொலை செய்துள்ளார். மேலும் அவர்களுடனிருந்த ஜஸ்வந்தியின் சகோதரனான தேஜ் என்ற 6 வயது சிறுவனையும் துடிக்க துடிக்க கொலை செய்திருக்கிறார். இதன் பிறகு அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கல்யாணம் முடிந்த 6 மாதத்தில் சோகம்... நிராகரித்த கணவன்.!! மனைவி எடுத்த விபரீத முடிவு.!!

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று இறந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மற்றும் அவரது தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "நட்பின் துரோகம்..." நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு.!! பொக்லைன் ஆபரேட்டர் கொடூர கொலை.!!