துயரத்தின் உச்சம்... பெத்த குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை.!! போலீஸ் விசாரணை.!!



woman-murdered-her-two-kids-and-commit-suicide-due-to-f

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பிரிந்தா என்ற மகளும் 1 வயதில் புவன் என்ற மகனும் இருந்தனர். இந்த தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத்த தகராறு நடந்து வந்திருக்கிறது.

India

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ரமேஷ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி தனது மகள் பிரிந்தா மற்றும் மகன் புவன் ஆகியோரை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பெண்ணின் கணவரான ரமேஷிடமும் காவல்துறை விசாரித்து வருகிறது.

இதையும் படிங்க: தீராத கடன் சுமை... விபரீத முடிவெடுத்த குடும்பம்.!! 3 பேர் பலி.!!