AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
"முருங்கைக்காய் சூப்பில் தூக்க மாத்திரை..." அப்பாவி கணவன் படுகொலை.!! மனைவி, கள்ளக்காதலன் கைது.!!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறியருகே உள்ள சிறுசோழன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவி இருக்கிறார். குமாரின் நண்பரான பாலா என்பவர் குமார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் விஜயாவுக்கும் பாலாவிற்குமிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இவர்களது கள்ளத்தொடர்பை பற்றி தெரிந்து கொண்ட குமார் தனது மனைவி விஜயா மற்றும் நண்பனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி குமாரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியிருக்கிறது. அதன்படி உணவு சமைக்கும் போது முருங்கைக்காய் சூப்பில் தூக்க மாத்திரைகளை கலந்திருக்கிறார் விஜயா. அதை சாப்பிட்ட குமார் மயக்கமடைந்ததும் தனது கள்ளக்காதலன் பாலாவை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: "காதல் பண்ண விட மாட்டியா..." கணவன் குத்தி படுகொலை.!! மனைவி கள்ளக்காதலன் கைது.!!
இதனையடுத்து குமார் இறந்து விட்டதாக விஜயா நாடகமாடியிருக்கிறார். எனினும் குமாரின் இறப்பில் சந்தேகமடைந்த உறவினர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக குமாரின் மனைவி விஜயாவிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பாலம் மற்றும் விஜயாவை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: "விடாமல் துரத்திய கள்ளக்காதல்..." கழுத்தை நெரித்து கணவன் கொலை.!! மனைவி, காதலன் வெறி செயல்.!!