அம்பலமான 5 வருட ரகசியம்! காதலியையும், மகளையும் கொன்று வீட்டிலேயே புதைத்த வாலிபர்! வெளியான பகீர் பின்னணிகள்!
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் ஷம்ஷாத். இவர் திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ஷம்ஷாத்துக்கு, கணவரை பிரிந்து ஒரு பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்த பிரியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இஸ்லாமியரான ஷம்ஷாத் தனது பெயர் அமித், தான் ஒரு இந்து என ஏமாற்றி பிரியாவுடன் பழகி வந்துள்ளார். மேலும் இருவரும் ஒரே வீட்டில் 5 வருடமாக ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் தனது காதலர் ஒரு இஸ்லாமியர் என்பதை அறிந்த பிரியா தன்னை ஏமாற்றிவிட்டதாக அவரிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர் அவரை விட்டு பிரியவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில், கடந்த 3 மாதங்களாக தனது தோழியை காணாமல், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துவந்த பிரியாவின் தோழி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஷம்ஷாத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் கடந்த மார்ச் 28ஆம் தேதி பிரியா மற்றும் அவரது மகள் இருவரையும் கொன்று தங்களது வீட்டிலேயே புதைத்ததாக கூறியுள்ளார்.
பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கு சென்று தோண்டி பார்த்தபோது இரண்டு எலும்புக்கூடுகள் கிடந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.