உயிர் நண்பனை கொன்று உடலை 30 துண்டாக வெட்டி புதைத்த கொடூரம்.! அதிர்ச்சி காரணம்.!

உயிர் நண்பனை கொன்று உடலை 30 துண்டாக வெட்டி புதைத்த கொடூரம்.! அதிர்ச்சி காரணம்.!


man killed his friend

உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் சுங்கச் சாவடி அருகே இர்பான் என்பவர் பாஸ்ட்டேக் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் ரகீப், அந்த கடைக்கு அருகே உணவகம் நடத்தி வருகிறார். ரகீப் தனது நண்பன் இர்பானின் தொழிலில் முதலீடு செய்துள்ளார். இந்தநிலையில் இர்பான் கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில் இறுதியாக அவர் ரகீப் மற்றும் அவரது கடையில் பணிபுரியும் அகீப்புடன் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் இருவரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி மழுப்பியுள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

விசாரணையில், தொழில் பிரச்சனையில் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இர்பானைக் கொன்று அவரது உடலை 30 துண்டுகளாக வெட்டி, பூமிக்கு மிக ஆழத்தில் புதைத்துவிட்டால் கண்டுபிடிக்க முடியாது என்பதால், ஜேசிபியை வைத்து, யாரும் வராத ஒரு இடத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டி உடல் பாகங்களைப் புதைத்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் சொன்ன இடத்தில பள்ளம் தோண்டி இர்பானை புதைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.