மனுஷன் பாவம்!! பயத்துல மனசு என்னெல்லாம் நினைச்சிருக்கும்!! அதிவேக காரில் முன்னாள் தொங்கியபடி சென்ற நபர்.. வைரல் வீடியோ..

மனுஷன் பாவம்!! பயத்துல மனசு என்னெல்லாம் நினைச்சிருக்கும்!! அதிவேக காரில் முன்னாள் தொங்கியபடி சென்ற நபர்.. வைரல் வீடியோ..


man-drags-truck-driver-on-bonnet-of-his-speeding-car

நபர் ஒருவர் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த காரின் முன்பக்கத்தில் தொங்கியபடி இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்த சம்பவமானது கான்பூரில் கடந்த திங்கள்கிழமை மாலை நடந்துள்ளது. லாரி மற்றும் கார் இரண்டும் மோதிக்கொண்ட சம்பவத்தில், காரில் இருந்த இளைஞர்களுக்கும் லாரி டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காரில் இருந்த இலைநகர் கோபத்தில், தனது காருக்கு முன்னாள் நின்றுகொண்டிருந்த லாரி டிரைவரை அடிக்க முயன்றுள்ளார்.

இந்த தாக்குதலில் லாரி ஓட்டுநர் காரின் முன்பக்கத்தில் ஏறி வைப்பரை இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறார். இந்நிலையில் காரில் இருந்த இளைஞர் உடனே தனது காரை அதிவேகத்தில் இயக்க தொடங்க, காரின் முன்பக்கத்தில் இருந்த லாரி ஓடுனரால் கீழே இறங்க முடியவில்லை.

இதனை அடுத்து அந்த இளைஞர் அதிவேகத்தில் தனது காரை இயக்க, லாரி ஓட்டுநர் காரின் முன்பக்கத்தில் தொங்கியபடி சுமார் 5 கி.மீ தூரம் வரை சென்றுள்ளார். இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவுசெய்து இணையத்தில் வெளியிட, தற்போது அந்த வீடியோ இனியத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

ஈவு இரக்கமின்றி காரை ஓடிச்சென்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.