முடி மாற்று சிகிச்சை செய்தவருக்கு இரண்டே நாட்களில் நடந்த கொடூரம்! இனியாவது உஷாரா இருங்க

முடி மாற்று சிகிச்சை செய்தவருக்கு இரண்டே நாட்களில் நடந்த கொடூரம்! இனியாவது உஷாரா இருங்க



Man death after hair transplant

மும்பையைச் சேர்ந்த 43 வயதான ஸ்ரவன் குமார் சௌத்ரி என்பவர் கடந்த சனிக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் முடி மாற்று சிகிச்சை செய்துள்ளார். 

மும்பை சாகி நாகா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரவன் குமார் சௌத்ரி. 43 வயதான இவர் கடந்த வாரம் ஒரு தனியார் மருத்துவமனையில் முடி மாற்று சிகிச்சை செய்துள்ளார். சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற சிகிச்சையில் இவருக்கு 9500 செயற்கை முடிகள் தலையில் நட்ப்பட்டுள்ளன. 

அதன்பிறகு வீட்டிற்கு சென்ற சௌத்ரிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென மூச்சுத் திணறல் மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குடும்பத்தினர் அவரை மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு அனாபிலாசிஸ் என்னும் உயிர் கொல்லும் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து இதய சிகிச்சை நிபுனர்களைக் கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை காலை சௌத்ரி உயிரிழந்தார். முடி மாற்று சிகிச்சையால் ஏற்பட்ட அலர்ஜி காராணமாகவே அவர் உயிரிழநதிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் உடல்கூறு ஆய்வு முடிந்த பின்பு தான் உண்மையான காரணம் தெரியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இதேபோன்ற சம்பவம் 2016 ஆம் ஆண்டு, 22 வயதான சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் சந்தோஷ் என்பவருக்கு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.