அடக்கொடுமையே.. ஒரு மணி நேரமாகியும் வேகாத முட்டை! உடைத்துப் பார்த்த ஊர் மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

அடக்கொடுமையே.. ஒரு மணி நேரமாகியும் வேகாத முட்டை! உடைத்துப் பார்த்த ஊர் மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!


man-cheating-villagers-to-sale-lastic-eggs

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், வரிகுண்டபாடு என்ற பகுதியில் போலி கோழி முட்டை வாங்கி ஊர்மக்கள் பலரும் ஏமாந்த சம்பவம் பெரும் பரபரப்பை 
 ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், வரிகுண்டபாடு கிராம பகுதிகளில் அண்மையில் நபர் ஒருவர் மினி வேனில் ஏராளமான முட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்து விற்பனை செய்துள்ளார். கடைகளில் ஒரு முட்டை 4 முதல் 6 ரூபாய்க்கு விற்று வரும் நிலையில் அந்த நபரிடம் விலை மிகவும் குறைவாக இருப்பதால் அப்பகுதி மக்கள் அனைவரும் தேவைக்கு அதிகமாகவே முட்டைகளை வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் கிராம மக்கள் முட்டைகளை வேக வைத்தபோது சுமார் ஒரு மணி நேரமாகியும் ஒரு முட்டை கூட வேகவே இல்லை. இந்த நிலையில் அவர்கள் முட்டையை உடைத்து பார்த்தபோது அது போலி முட்டை அதாவது பிளாஸ்டிக் முட்டை என தெரியவந்துள்ளது.

அதைத்தொடர்ந்து முட்டை வியாபாரி ஊர் மக்கள் அனைவரையும் ஏமாற்றி எல்லா முட்டைகளையும் விற்றுவிட்டு சென்றுவிட்டார் என்பதை உணர்ந்துள்ளனர். அதனை தொடர்ந்து கிராம மக்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.