உல்லாசமாக இருக்க ஆசையோடு போன இளைஞர்..! போன இடத்தில் காத்திருந்த அதிர்ச்சி..! உஷார் மக்களே.!

உல்லாசமாக இருக்க ஆசையோடு போன இளைஞர்..! போன இடத்தில் காத்திருந்த அதிர்ச்சி..! உஷார் மக்களே.!


Man cheated by girl through dating app

டேட்டிங் ஆப் மூலம் நபர் ஒருவருக்கு ஆசைவார்த்தை கூறி அவரிடம் இருந்த பணம், நகை, வாட்ச் ஆகியவற்றை மர்மநபர்கள் பறித்துச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புனேவில் இயக்கிவரும் பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் ரவி. 34 வயதாகும் ரவி அடிக்கடி டேட்டிங் ஆப் மூலம் பெண்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் ரவி சமீபத்தில் அதே டேட்டிங் ஆப் மூலம் பெண் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். 

அந்தப் பெண்ணும் ரவியுடன் நெருக்கமாக பேசியதை தொடர்ந்து தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்கலாம் என ரவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை தனியாக அழைத்துள்ளார். 

இதனை நம்பி ரவியும் கடந்த மாதம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று அந்த பெண் கூறிய இடத்திற்கு தனியாக சென்றுள்ளார். ஆனால் அந்த பெண் கூறிய இடத்தில் அந்த பெண்ணிற்கு பதிலாக மூன்று ஆண்கள் இருந்துள்ளனர். 

ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து ரவி அங்கிருந்து கிளம்ப முற்பட்டபோது அங்கிருந்த 3 ஆண்களும் ரவியை சுற்றிவளைத்து, ஆயுதங்களால் அவரைத் தாக்கி அவரிடம் இருந்த நகை, பணம், வாட்ச் போன்றவற்றை பறித்துக்கொண்டு அவரை அங்கிருந்து அனுப்பி உள்ளனர். 

இதை வெளியே கூறினால் தனக்கு அவமானம் எனக் கருதிய ரவி இதனை போலீசில் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். அதேநேரம் தனக்கு நடந்த சம்பவம் குறித்து தனது நண்பர்களிடம் ரவி கூறிய நிலையில், இதே போன்ற சம்பவம் வேறு யாருக்கும் நடக்காமல் இருப்பதற்காக இதைப்பற்றி காவல்துறையிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என ரவியின் நண்பர்கள் அறிவுரை கூறியுள்ளனர். 

இதனை அடுத்து ரவி நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுபோன்ற இணையத்தளம் மற்றும் செயலிகள் மூலம் பல்வேறு மோசடிகள் நடந்த வண்ணம் உள்ள நிலையில் இது போன்ற செயலி மற்றும் இணையதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம்.