பையன் பார்க்கத்தான் இப்படி!! ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! 50 -கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம்.. பையனோட அப்பா யாரு தெரியுமா??

பையன் பார்க்கத்தான் இப்படி!! ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! 50 -கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம்.. பையனோட அப்பா யாரு தெரியுமா??


Man cheated 50 women through matrimony site

மேட்ரிமோனி மூலம் இளம் பெண்களுடன் பழகி, அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு பணம், நகைகளை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் பிரபல மேட்ரிமோனி இணையதளம் ஒன்றில் திருமணத்திற்கு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சூர்யா(25) என்ற இளைஞர், அந்த பெண்ணை தொடர்புகொண்டு, தான் மத்திய மனித உரிமை ஆணையத்தில் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும், தன்னுடைய பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் கூறி பெண்பார்க்க வரலாமா என கேட்டுள்ளார்.

அந்த பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, சூர்யா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண்ணின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகியுள்ளார். ஒருகட்டத்தில் அந்த பெண் சூர்யாவை முழுவதுமாக நம்பியுள்ளார். இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட சூர்யா, அந்த பெண்ணை தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச்சென்று அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, அந்த பெண்ணிடம் இருந்த 7 லட்சம் பணத்தையும் அபகரித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

தொடர்ந்து சூர்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டும் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், இதுகுறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இளம் பெண்ணின் புகாரை அடுத்து, தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், செல்போன் சிக்னலை வைத்து அவர் கோவையில் வேறொரு இளம்பெண்ணுடன் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது  சூர்யாவை கைது செய்தனர்.

இதனை அடுத்து போலீசார் சூர்யாவிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த சூர்யாவின் தந்தை   intelligence bureau  எஸ்.பியாக பணியாற்றிவருகிறார். சூர்யா இதுபோன்று மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவிடும் பெண்களை குறிவைத்து அவர்களுடன் பழகி, நம்பிக்கையை ஏற்படுத்தி, பின் அவர்களுடன் உல்லாசமாக இருந்துவந்துள்ளார்.

சூர்யா இதுவரைக்கும் இதுபோன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பெண்களை ஏமாற்றி, உல்லாசம் அனுபவித்துவந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல், உல்லாசமாக இருக்கும்போது, அதனை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து, இளம் பெண்களிடம் காட்டி பணம் மற்றும் நகை போன்றவற்றையும் பறித்துவந்துள்ளார் சூர்யா.

வெளியே சொன்னால் மானம் போய்விடும் என்கிற பயத்தில், சூர்யாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இதுகுறித்து புகார் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போர்த்து சென்னை பெண் புகார் கொடுத்துள்நிலையில், சூர்யா மீது பல்வேறு காவல் நிலையங்களில் 7 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.