
மூன்று நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாடிய மகாத்மா காந்தியின் பேரன் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாடிய மகாத்மா காந்தியின் பேரன் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.
மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலா காந்தியின் பேரன் சதீஷ் துபேலியா. 66 வயதாகும் சதீஷ் துபேலியா பிறந்து வளர்ந்தது எல்லாமே தென்னாப்ரிக்காவில்தான். வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் தனது வாழ்நாளில் பெரும்பாலான பகுதியை மீடியாவிலையே கழித்துவிட்டார்.
மேலும் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் அமைந்துள்ள பீனிக்ஸ் குடியேற்றத்தில் காந்தி மேம்பாட்டு அறக்கட்டளை ஒன்றை தொடங்கி ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துவந்தார் சதிஷ் துபேலியா. இந்நிலையில் இவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அவரின் குடும்பத்தினர் கூறுகையில், "சதிஷ் துபேலியா நிமோனியா காய்ச்சலுக்கான மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டநிலையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சையில் இருந்த அவர் நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் சதிஷ் துபேலியா தனது 66 வது பிறந்தநாளை மருத்துவமனையில் கொண்டாடியதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்".
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதிஷ் துபேலியாவின் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement