இந்தியா

11 மண்டை ஓடுகள் மற்றும் 54 கரு எலும்புகள் கண்டெடுப்பு.. சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவத்தில் பகீர் தகவல்.!

Summary:

11 மண்டை ஓடுகள் மற்றும் 54 கரு எலும்புகள் கண்டெடுப்பு.. சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவத்தில் பகீர் தகவல்.!

13 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், மருத்துவமனைக்கு சொந்தமான பயோகேஸ் ஆலையில் நடந்த சோதனையில் கரு எலும்பு கூடுகள் கைப்பற்றப்பட்ட பகீர் நிகழ்வு நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வார்தா மாவட்டத்தில், 13 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன், அவனது தாய் - தந்தை மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது உறுதியானது. 

இதனையடுத்து, இந்த விவகாரம் அம்மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தனர். மேலும், மருத்துவமனையில் சட்டவிரோத கருக்கலைப்புகள் அப்பட்டமாக நடந்தது உறுதியாகவே, மருத்துவமனை இயக்குனர் ரேகா கதம் மற்றும் அவரது கூட்டாளியான நர்ஸ் என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தனியார் மருத்துவமனைக்கு சொந்தமாக ஆர்வி பகுதியில் செயல்பட்டு வரும் பயோகேஸ் ஆலையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 11 மண்டை ஓடுகள் மற்றும் 54 கரு எலும்புகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement