ரூ.50 திருடிய 10 வயது மகனை அடித்தே கொலை செய்த தந்தை.. திக்கற்று தவித்த தாயின் பெரும் சோகம்.!

ரூ.50 திருடிய 10 வயது மகனை அடித்தே கொலை செய்த தந்தை.. திக்கற்று தவித்த தாயின் பெரும் சோகம்.!


Maharashtra Thane 10 Aged Child Killed by Father

வீட்டில் ரூ.50 திருடிய மகனை தந்தை அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே, கல்வா பகுதியை சார்ந்தவர் பப்லு ஓம் பிரகாஷ் பிரஜாபதி (வயது 41). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் மகன் உள்ளனர். இவரது 10 வயது மகன் கரண். பப்லுவின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த டிச. 30 ஆம் தேதி இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்து மயக்க நிலையில் இருந்த சிறுவனை மீட்ட காவல் துறையினர் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், அவர் அன்றே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், டிச. 29 ஆம் தேதி சிறுவன் தனது தந்தையால் தாக்கப்பட்டதும், அவரது உடலில் பல இடங்களில் காயம் இருந்ததும் உறுதியானது. சிறுவன் வீட்டில் ரூ.50 பணத்தை திருடிவிட்ட நிலையில், இந்த விஷயம் சிறுவனின் தந்தைக்கு தெரியவந்துள்ளது.  

maharashtra

இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை, தனது மகனை சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சிறுவன் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளன. மகன் இறந்துவிட்டான் என்று எண்ணிய தந்தை, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட தாயோ மகனின் நிலை குறித்து தெரியாமல் இருந்துள்ளார். 

அக்கம் பக்கத்தினர் ஒருவர் எதற்ச்சையாக இவர்களின் வீட்டிற்குள் செல்கையில் சிறுவன் சுயநினைவின்றி உடலில் காயத்துடன் இருப்பதை கண்டு காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவான சிறுவன் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.