என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
அரசியலை பலாத்காரம், படுகொலை செய்யும் பாஜக.. சுயநலத்திற்காக இப்படியா?; கொந்தளிக்கும் எம்.பி சஞ்சய் ராவத்.!

மகாராஷ்டிரா மாநில அரசியலை இந்தியாவே பதறி பார்க்கும் வண்ணம் பல சர்ச்சையை செயல்கள் நடந்து வருகின்றன.
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அஜித் பவர், தனது சார்பில் 40 எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு சிவசேனா-பாஜக கூட்டணியில் இணைந்து, அம்மாநில துணை முதல்வர் பதவியை பெற்றார். கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அவர் மாநில துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டுள்ளார்.
அவரது சர்ச்சை செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விஷயம் குறித்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணியில் இடம் பெற்றுள்ள எம்.பி சஞ்சய் ராவத், "இந்த விஷயத்திற்கு பின்னால் மத்திய அரசு மூளையாக செயல்பட்டு வருகிறது.
அவர்களின் அரசியலை தொடர்ச்சியாக படுகொலை செய்பவர்கள். அரசியலை பலாத்காரம் செய்து வருகிறார்கள். அவர்கள் குற்றங்களை செய்யும் வழிமுறைகள் முன்பு இருந்ததைப் போலவே இருக்கிறது. தங்களது சுயநலத்திற்காக அவர்கள் அரசியல் கட்சிகளை உடைத்து, பிரிந்து வந்தவர்களை வைத்து கட்சிக்கான உரிமையை கோருகின்றனர்" என பேசினார்.